tamilnadu

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மறுவாக்குப் பதிவு

திருவள்ளூர், டிச,29 - திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக் குட்பட்ட பாப்பரம்பாக்க த்தில் பள்ளியின் வாக்குச்சாவடி மையத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளி யன்று (டிச.27) நடை பெற்றது. அப்போது,   வாக்குச்சாவடி மையத்தில் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளின் பின்புறம் தேர்தல் ஆணையம் பதித்திருந்த முத்திரை, முன்புறம் ஒரு குறிப்பிட்ட சின்னத்தின் மீதும் பதிவாகியிருந்ததாக புகார் எழுந்தது. இந்த வாக்குச்சீட்டுகளில் வாக்கினை பதிவுசெய்தால், அது செல்லாததாகி விடும் என சிலர் கூறினர். இதைத் தொடர்ந்து வெள்ளியன்று நண்பகல் 12 மணியளவில் வாக்குப்பதிவு மையத்திற்குள் புகுந்த கும்பல் ஒன்று, அங்கிருந்த மேசைகளை கவிழ்த்து, ஆவணங்களை கிழித்து சேதப்படுத்தியது. மேலும் வாக்குப்பெட்டிகளுக்குள் தீ வைத்து கொளுத்தினர். இதைத் தொடர்ந்து, பாப்பர ம்பாக்கத்தில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பக்கம் ஊராட்சி யில் மறுவாக்குப் பதிவு திங்களன்று (டிச.30) நடை பெறும் என மாவட்ட ஆட்சி யர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.  வாக்குபதிவின் போது அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமை யான, சட்ட ரீதியான நட வடிக்கைகள் எடுக்கப்படும்.  வாக்குப் பதிவு நடைபெறும் இடத்தில் வாக்காளர்களை தவிர்த்து வேறு நபர்கள் யாரும்  நிற்கக் கூடாது என்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பக்கம் ஊராட்சிக்கு கூடுதலான காவல்துறை பாதுகாப்பு   ஏற்பாடுகளும் மற்றும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட த்தில் உள்ள மற்ற 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு திங்களன்று நடைபெறுகிறது.  இதற்காக 1174 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது. இந்த மையங்களில் 206 கேமராக்கள் அமைக்க ப்பட்டுள்ளது. மேலும்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

;