திருவள்ளூர், ஜூலை 26- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சோழவரத்தை சேர்ந்த சகுந்தலா (52) என்பவர் துணை வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 4ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. சென்னை மூலக் கடையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி ஞாயி றன்று (ஜூலை 26) உயிரிழந்தார். அண்மையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமி நாதன் உயிரிழந்த நிலையில், இந்த மரணம் நிகழ்ந் துள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் களிடையே அச்சம் நிலவுகிறது.