tamilnadu

img

திருமண வாழ்த்து....

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் வட்டச் செயலாளர் வை.கல்யாணசுந்தரம்- வசந்தி இல்ல திருமண  விழா சிதம்பரத்தில் நடைபெற்றது. மணமகள் க.சங்கீதா, மணமகன் க.சதீஷ்குமார் ஆகியோரது திருமணத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடத்தி வைத்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர்கள் டி.புருஷோத்தமன், ஜி.பழனி ஆர்.மனோகரன், சி.குழந்தைவேலு, ஏ.கிருஷ்ணமூர்த்தி, என்.காசிநாதன், எம்.கலியமூர்த்தி, கே.என்.பன்னீர்செல்வம், எஸ்.கருணாகரன், முத்துக்குமரன், பெலிக்ஸ் அந்தோனி சாமி,  ரபியுதின், பி.ராமானுஜம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

                                                                     ***************

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டக்குழு உறுப்பினர் கே.பாலமுருகன்  மகன் யேக்னேஷ் – தங்கம் (எ) சத்யா ஆகியோர் திருமணம் போளூரில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு தலைமையில் நடந்த மணவிழாவில், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர்கள் எம்.சிவக்குமார், எஸ்.தயாநிதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.