tamilnadu

img

உயர்மின் கோபுரம், 8 வழிச் சாலை திட்டங்களை கைவிடக் கோரி காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை, ஜுலை 18- விவசாய நிலங்களில் உயர்மின்  கோபுரம், சென்னை-சேலம் இடையே  8 வழிச் சாலை திட்டங்களை கைவிடக் கோரி, திருவண்ணாமலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், உயர் மின் அழுத்த கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், 8 வழிச்  சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயி கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில துணைத்  தலைவர் டி. ரவீந்திரன் தலைமை யில் காத்திருப்பு போராட்டத்தில் வியாழனன்று (ஜூலை 18) ஈடு பட்டனர்.  இதில் மாவட்டச் செயலாளர் வி. சுப்பிரமணி, தலைவர் டி.கே.வெங்க டேசன், நிர்வாகிகள் கே.கே.வெங்க டேசன், அழகேசன், ஏ.வி.ஸ்டாலின்  மணி, உதயகுமார், ஒருங்கிணைப்பா ளர் வழக்கறிஞர் எஸ்.அபிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்  குமார், நிர்வாகிகள் எம்.வீரபத்திரன்,  பி.செல்வன், எம்.ரவி, காமராஜ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் ஒப்புதல் இல்லா மல், வருவாய்த்துறை, காவல் துறையை வைத்து ஆச்சுறுத்தியும், சாகுபடிகளை நாசப்படுத்தியும், மின் கோபுரம் அமைக்கும் பணி களை கைவிட வேண்டும், மின்கோ புரம் அமைத்து செயல்படும் திட்டங்க ளுக்கு, மின் கோபுரங்களுக்கும், கம்பி செல்லும் பாதைக்கும், வருட  வாடகையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும், மின் திட்டங்களை  விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வதை தவிர்த்து, சாலையோரம் கேபிள் மூலமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும், விவசாயிகளின் வாழ்வா தாரத்தை நாசமாக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் (1885ஆம் ஆண்டு) ஏற்படுத்தப்பட்ட தந்தி சட்டத்தை கைவிட்டு, விவசாயி களுக்கு பாதுகாப்பான புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். சென்னை-சேலம் 8 வழிச் சாலை  திட்டத்திற்கு, சென்னை உயர்நீதி மன்றம் விதித்துள்ள தீர்ப்பின்படி,  நில ஆர்ஜித நடவடிக்கைகளைக் கைவிட்டு, நிலத்தை விவசாயிகளி டமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,  8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டியக்கம்,  உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக் கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

;