tamilnadu

img

அடிப்படை வசதிக்கு காத்திருக்கும் கிராமங்கள் மக்கள் பணியாற்ற களமிறங்கும் சிபிஎம் வேட்பாளர்

திருவண்ணாமலை, டிச. 14- திருவண்ணாமலை மாவட்டம் வருவாய் ஆதரம் குறைந்த, கிரா மப் புறங்கள் நிறைந்த மாவட்ட மாகும். கிராமப் பகுதிகளில் விவ சாய தொழில் இன்றும் பரவலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 47 கிராம ஊராட்சிகள் அமைந் துள்ளது. 1 லட்சத்து 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து  கிராமங்களிலும் விவசாயத் தொழில் நடைபெற்று வருகிறது. கரும்பு பிரதான பயிராகவும், நெல், மணிலா பயிறு வகைகள்  மற்றும் பூ சாகுபடி செய்யப்படு கிறது. ஆனால் விவசாயிகள் நிறைந்த கிராமப் பகுதிகளில், மக்க ளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்த ஒன்றி யத்தில், சீலப்பந்தல், மல்லவாடி, சொரந்தை திடீர்குப்பம் உள்ளிட்ட சாலைகள் குண்டும், குழியுமாக இரசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாத நிலை உள்ளது. சீலப்பந்தல் கிராமத்தில் சுடுகாடு மற்றும் சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதியில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதே ஒன்றியத்தில் கடந்த 60  ஆண்டுகளாக புகழ்பெற்ற மல்ல வாடி சந்தை செயல்பட்டு வந்தது.  ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட  கால்நடைகளும், காய்,கனி, மளிகை ஜவுளி உள்ளிட்ட பொருட்  களும் சந்தையில் விற்பனையாகி வந்தது. தற்போது விவசாய நெருக்கடி, அடிப்படை வசதிகள் குறைவு காரணமாக இந்த சந்தை  சரியாக செயல்படாமல் முடங்கிப் போனது. இந்த ஒன்றியத்தில் கரும்பு பயிருக்கு உரிய விலை கேட்டும்,  100 நாள் வேலை திட்டத்தில் அனை வருக்கும் வேலை வழங்க கேட்டும், சாலையை சீரமைக்க நாற்றுநடும் போராட்டம், உயர்மின்  கோபுரங்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று மக்கள் பணியாற்றி வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாகி ஜி.பன்னீர்செல்வம், துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு  உறுப்பினர் பதவிக்கு வெள்ளி யன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

;