tamilnadu

img

திவ்யா கல்லூரி மாணவர்களுக்கு கோவையில் சிறப்பு பயிற்சி

திருவண்ணாமலை, ஆக. 14- சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள  திவ்யா பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கா னிக், எலக்ட்ரிகல் பாடப்பிரிவில் பயிலும் 60 மாணவர்களுக்கு கோவையில் சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. தனியார் நிறுவன வல்லுநர் குழு மூல மாக மின்மோட்டார்களுக்கு காயில் சுற்று தல், பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் மோட்டார் உற்பத்தியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் செல்வராஜ் பாராட்டி னார்.