திருவண்ணாமலை,பிப்.8- மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெறக்கோரி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போளூர் புதிய பேருந்து நிலையத்தில் கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு ப.செல்வன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க வட்டச் செயலாளர் அ.உதய குமார், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் கே.வி. சேகரன், திமுக நகரச் செயலாளர் கே.தனசசேகரன் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சி, முஸ்லிம் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.