tamilnadu

img

திருவண்ணாமலையில் விதிமீறி திறந்திருந்த கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலை, ஜுன் 14- திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா  தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை  கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராம ஊராட்சி  எல்லைப்பகுதிகளில் ஊராட்சி அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை நகரத்தில்  தற்காலிகமாக இயங்கி வந்த காய்கறிக் கடைகள் மூடப்பட்டதால், மக்கள் வசிப்பி டங்களுக்கே வாகனத்தில் சென்று வியாபாரிகள் காய்கறி களை விற்பனை செய்தனர். ஆனால் விதியை மீறி தடைசெய்யப்பட்ட நேரத்தில் சில  கடைகள் திறக்கப்பட்டிருந்தது. திருவண்ணாமலை நகரம், போளூர் சாலை, ஆணைகட்டித்தெரு, பே.கோபுர தெரு உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறி திறக்கப்பட்டிருந்த 5 கடை களுக்கு சுகாதார ஆய்வாளர்களும், நகராட்சி ஊழி யர்களும் சீல் வைத்தனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருவதால். கிராம  பகுதி உள்ளிட்ட பொதுமக்களுக்கு ஒன்றிய நிர்வாகம் சார்பில்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் குறித்து  அவர்களின் உறவினர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்க தவறி னால் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;