திருவண்ணாமலை, செப். 18- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான, 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலை நெசல் கிராமம் அருகில், சாராயம் கடத்தப்படுவதாக, விழுப்புரம் மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், ஆரணி அருகே காவல் துறை யினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழி யாக வந்த ஒரு டேங்கர் லாரி நிற்காமல் வேகமாக சென்றது. அந்த லாரியை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் 500 கேன்களில் இருந்த 25,000 லிட்டர் எரிசாரா யத்தையும், கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரியை யும், நான்கு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். காவல் துறையினரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் தப்பி ஓடி விட்டனர். பறிமுதல் செய்த 25,000 லிடர் எரி சாராயத்தை போளூர் கலால் காவல் அலுவலகத்தில் ஒப்ப டைத்தனர். இதன் மதிப்பு 1 கோடி ரூபாய் என்று கூறப்படு கிறது.