tamilnadu

img

வேட்பு மனு தாக்கல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.பரிமளா  வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் செயற்குழு உறுப்பினர் 
எம்.வீரபத்திரன், வட்டச் செயலாளர் ஏ.லட்சுமணன், திமுக நிர்வாகிகள் நீலமேகம், ரவீந்திரன், சுதாகர், விசிக நிர்வாகிகள் அரிகிருண்ணன், முனியன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி காளி, மதிமுக 
நிர்வாகி கே.முருகன், குடியரசு கட்சி நிர்வாகி கே.நவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

**************

கடலூர் ஊராட்சி ஒன்றியம் 22ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஏ.தணிகாசலம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார், ஒன்றியச் செயலாளர் ஜே.ராஜேஷ்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தட்சணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

*************

கடலூர் ஊராட்சி ஒன்றியம் 6ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கவிதா பஞ்சாட்சரம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

**************

கடலூர் ஒன்றியம் ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுலோச்சனா நாகப்பன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

**************

கடலூர் ஊராட்சி ஒன்றியம் 28ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  சுமதி ஆளவந்தார் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மருதவாணன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

**************

கடலூர் ஒன்றியம் 13ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கே.புவனேஸ்வரி வேட்புமனு தாக்கல் செய்தார்.

**************

கடலூர் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் பி.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

**************

பண்ருட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பன்னீர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

**************

பண்ருட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பூர்வசந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

**************

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வி.சுப்பிரமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் பி.செல்வன், டி.கே.வெங்கடேசன், கே.கே.வெங்கடேசன், பி.சுந்தர், சிமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

;