வந்தவாசி, ஜுலை 15- தமிழக அரசு 2018-19ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 8.71 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்த திருவண்ணாமலை மின் விநியோக வட்டத்தை பிரித்து புதிதாக துவக்க வேண்டிய ஆரணி மின் பகிர்மான வட்டத்தை இனியும் கால தாமதமின்றி துவக்க வேண்டுமென தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு மாநாடு வலியுறுத்தி யது. வந்தவாசியில் வட்டத் தலைவர் ஆர்.சிவ ராஜ் தலைமையில் நடைபெற்ற 11ஆவது கிளை மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதி ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், 1.12.2019இல் இருந்து வழங்க வேண்டிய புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னர் செயற்பொறியாளர், வந்த வாசி அலுவலகம் முன்பிருந்து துவங்கிய பேரணியை பெ.கண்ணன் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் ஆ.பெருமாள் கொடி ஏற்றி னார். இணைச்செயலாளர் சி.ரவி வர வேற்றார். மண்டலச் செயலாளர் டி.பழனி வேல் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் கே.காங்கேயன் வேலை அறிக்கையையும், மு.பாலாஜி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி, அ.ஏ. அருணாசலம், பவர் என்ஜினியர் சங்கம் இரா.ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதிய தலைவராக கே.காங்கேயன், செய லாளராக மு.பாலாஜி, பொருளாளராக வி.எம்.வெங்கேடேசன் தேர்வு செய்யப்பட்ட னர். மாநில உதவிப் பொதுச் செயலாளர் தி.ஜெய்சங்கர் நிறைவு செய்து பேசினார். இணைச் செயலாளர் கெ.ராஜா நன்றி கூறி னார். இதில் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.கண்ணன், ஜே.அருள்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.