tamilnadu

img

தலித் ஊராட்சி பதவியை அபகரித்த சாதி ஆதிக்க சக்திகள் சொரகொளத்தூர் கிராம மக்கள் புகார்

திருவண்ணாமலை, ஜன. 20- திருவண்ணாமலை மாவட்டத்தில் சமீ பத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்த லில், தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி பதவியை சாதி ஆதிக்க சக்திகள்  அபகரித்துள்ளதாக, ஆதிதிராவிட மக்கள்  புகார் தெரிவித்துள்ளனர். திங்களன்று (ஜன.20) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது சொரகொளத்தூர் ஊராட்சி. சொர கொளத்தூர் ஊராட்சியில்சாதி ஆதிக்க சக்திகள் வசிக்கும் பகுதிக்கும் ஆதிதிரா விட மக்கள் வசிக்கும் பகுதிக்கும் 3 கி.மீ  தூரம் இடைவெளி உள்ளது. சொரகொளத் தூர் ஊராட்சியில் உள்ள சாதி ஆதிக்க  சக்திகள், தலித் மக்களுக்கும் அடிக்கடி  சாதிப்பிரச்சனை ஏற்பட்டு வந்தது. ஊருக்குள்  உள்ள கடைகளில் தலித் மக்களுக்கு எந்த  பொருளும் கொடுப்பதில்லை. சமூக புறக் கணிப்பு செய்து வந்தனர்.  இதனால் கடந்த 2007 ஆம் ஆண்டு, திரு வண்ணாமலை கோட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, சேரிப்பகுதியில் தனியாக மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்கம், பகுதி நேர நியாய விலைக்  கடை, தனியாக வாக்குச்சாவடி அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஊராட்சியில், சாதி ஆதிக்க  சக்திகள் மக்கள் வசிக்கும் பகுதியில், சாதி இந்து வாக்காளர்கள் 1950 பேர் உள்ளனர். தலித் மக்கள் வசிக்கும் பகுதியில், வாக்கா ளர்கள் 650 பேர் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த ஊராட்சி, ஆதிதிராவிட மக்களுக்கான ரிசர்வ்  ஊராட்சி மன்றமாக இட ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஆனால், தலித் மக்கள் ஊராட்சி  மன்றத் தலைவராக வரக்கூடாது என, சாதி ஆதிக்க சக்திகள் ஒரு திட்டத்தை தீட்டினர்.  அதாவது, சொரகொளத்தூர் ஊராட்சி யில் வசிக்கும் பிற வகுப்பை சேர்ந்த தட்சணா மூர்த்தி மகன் பார்த்திபன் என்பவர், செங்கம்  அடுத்த பீமானந்தல் பகுதியில் வசிக்கும் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதியினர் திருவண்ணாமலை நகரில் வசித்து வரு கின்றனர். ஆனால் சொரகொளத்தூர் கிராமத்  தில் வசிப்பது போல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக, தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்த லில், ஜெயலட்சுமி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும், ஜெயலட்சுமி வெற்றி  பெற்றதால், சொரகொளத்தூர் ஆதிதிராவி டர் மக்களுக்கு அதிகாரம் கிடைக்காது என வும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும், சொரகொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக  ஜெயலட்சுமி வெற்றி பெற்றதை ரத்து செய்ய வேண்டும், சொர  கொளத்தூர் தலித் மக்கள் வசிக்கும் பகு தியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்  என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;