tamilnadu

கழிவுப்பொருள் அரைக்கும் இயந்திரம் இடமாற்றம் செய்யக் கோரிக்கை

திருப்பூர், ஜன.14 – திருப்பூர் மாநகராட்சி காவிலிபாளையம்  புதூரில் திடக்கழிவு மேலாண்மைத் திட் டத்தில் கழிவுப் பொருட்களை அரைப் பதால் சுகாதார சீர்கேடும், பாதிப்பும் ஏற்படு வதாக பொது மக்கள் புகார் கூறியுள்ளனர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று காவிலிபாளையம் புதூர் பொது  மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: காவிலிபாளையம் புதூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் கழிவுப் பொருட்கள் கடந்த ஒரு மாதம்  எந்திரம் மூலம் அரைக்கப்படுகிறது. இத னால் இப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவ துடன் , கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகி றது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் முதியோர்களுக்கும், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. மேலும், கழிவு பொருட்களை அரைக்கும் எந்திரத்திற்கு மிக அருகில் குழந்தைகள் படிக்கும் அங்கன் வாடியும், தொடக்கப்பள்ளியும் உள்ளது.  குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படு கிறார்கள். எனவே இந்த கழிவுப் பொருள் அரைக்கும் எந்திரத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;