tamilnadu

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்

திருப்பூர், ஜன. 4- திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட் டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகா மினை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு செய்தார். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகு திகளுக்குட்பட்ட பகுதிகளில் சனியன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2020 தொடர்பாக வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. 1.1.2020- நாளினை தகுதி நாளாகக் கொண்டு வாக் காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2020 மேற்கொள்ளப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியி டப்பட்ட கால அட்டவணைப்படி கடந்த டிச.23 அன்று திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்ல டம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடு மலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளி யிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 2484 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய 1028 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டி யலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்கா ளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர் பாக நடைபெறும் சிறப்பு முகாம் நடை பெற்றது. இந்நிலையில், சனியன்று திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புஷ்பா ரவுண்டானா தேவாங்கபுரம் மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி, திருப்பூர் தெற்கு  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரண் மனைப்புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட ராயர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆகிய மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.ஆர்.சுகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார். மேலும், ஜன.5, 11 மற்றும் 12 ஆகிய விடுமுறை தினங்களில் நடை பெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண் டும் என்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, தேர்தல் வட்டாட் சியர் ச.முருகதாஸ், மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன், வட்டாட்சியர்கள் பா.ஜெயக்குமார் (திருப்பூர் வடக்கு), மகேஷ் வரன் (திருப்பூர் தெற்கு), சிவசுப்பிரமணியம் (பல்லடம்) மற்றும் தொடர்புடைய அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

;