tamilnadu

ஜவுளி தொழில் நெருக்கடிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை மத்திய அமைச்சருக்கு கே.சுப்பராயன் எம்.பி. கடிதம்

திருப்பூர், பிப். 18 – ஜவுளி மற்றும் ஆய்த்த ஆடைதொழில் துறை சந்தித்து வரும் கடும் நெருக்கடிக்குத் தீர்வு  காண தொழில், தொழிலாளர், அரசு நிர்வாகம் என  முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு திருப்பூர் எம்.பி., கே.சுப்பரா யன் கடிதம் எழுதியுள்ளார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி  இரானிக்கு திங்களன்று கே.சுப்பராயன் எம்.பி.  எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜவுளித் தொழில் தற்போதுள்ள நிலையில் ரூ.10ஆயிரத்து  480 கோடிக்கு தேசிய ஜவுளித் தொழில்நுட்ப இயக்கம் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மூழ்கிக் கொண்டிருக்கும் தொழிலுக்கு எவ்வகையிலும் உத வப் போவதில்லை. தற்போது நிலவும் நெருக்கடி நிலையை மத்திய அமைச்சர் கூர்ந்து நோக்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உட னடியாக எம்இஐஎஸ் அந்தஸ்தை மீட்டமைப்பது டன், ஆர்ஓஎஸ்சிடிஎல் மற்றும் ஐஜிஎஸ்டி பிடித்தம் செய்த தொகைகளை உடனடியாக வழங்க வேண் டும். அதன் மூலமே பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுடன், வருவாய் ஈட்டும் இந்த தொழிலைப் பாதுகாக்க முடியும். இந்தியா ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையில் முன்னணி நாடாக திகழ்ந்தாலும், உலகின் முக்கிய நுகர்வு நாடுகளுக்கும், உற்பத்தி நாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றி இருப்பது இந்திய ஆயத்த ஆடைதுறைக்கு கடும்  அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உள்நாட்டு  தொழில் உலக அளவில் நிலைத்து நிற்கவும் அரசு கொள்கை ரீதியாக தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தொழில் துறை, அரசு, தொழிலாளர் என முத்தரப்பு கூட் டத்துக்கு ஏற்பாடு செய்து இத்தொழில் சந்திக்கும்  பிரச்சனைகள் குறித்து பேசி தீர்வு காண நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி., கேட்டுக் கொண்டுள்ளார்.

;