tamilnadu

ஊத்துக்குளி ஆர்.எஸ்.பள்ளி இடத்தை மீட்க பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் வாக்குறுதி இன்று விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது

திருப்பூர், மார்ச் 10 – ஊத்துக்குளி ஆர்.எஸ். அரசு நடுநிலைப் பள்ளி இடத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்கு உண்ணாவிரதம் அறி விக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தரப் பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பள்ளி இடத்தை மீட்டுத் தருவதற்கு வாக்குறுதி அளித்துள்ளனர். அதனடிப்படையில் பொது மக்கள், பெற்றோருக்கு புதனன்று விளக்கக் கூட்டம் நடத்துவது என்று அனைத் துக் கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரயி லடி அரசு நடுநிலைப் பள்ளிக்கான இடத்தை ஒப்படைக்க கோரி அனைத்து கட்சிகள் சார்பில் இன்று (மார்ச் 11) உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்ற அறி விக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊத்துக் குளி வட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் செவ்வா யன்று காலை 11 மணிக்கு ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்ட குழுவோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் திமுக ஒன்றிய செயலாளர் பி.பி.ஈஸ்வரமூர்த்தி, பேரூராட்சி செயலாளர் கே.கே.ராசுக்குட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், ஆர்.எஸ்.கிளை செயலாளர் வி.கே.பழனிசாமி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி ஆர்.எஸ்.கிளை செயலாளர் வி.ஏ.சரவணன், தாலுக்கா கமிட்டி உறுப் பினர் கே.கே.குமரன், காங்கிரஸ் வட்டார தலைவர் எம்.சி.பழனிசாமி, நகர தலைவர் ரங்கசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கோபால் ராஜா, கே.எம்.குப்புசாமி, எம்.கிருஷ்ணன்  மற்றும் பெற்றோர்கள், முன்னாள் மாண வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் போராட்ட குழு சார்பில் சம்பந்தப்பட்ட இடம், ராக்கியாபாளையம் கிராம புல எண். 1, வண்டி பேட்டை, பள்ளி, சத்திரம் என வகைப்பாடு செய்யப்பட்டு உள்ளதால், அவ்விடத்தில் உள்ள ஆக்கி ரமிப்பை அகற்றி பள்ளிக்கு ஒப்படைக்க வேண்டும். நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதால் இதை விரைவாக செய்ய வேண்டும். பள்ளி இடத்தை வகை மாற்றி பட்டா கொடுக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களில் நிலமற்ற தகுதி யானவர்கள் இருந்தால் மாற்று இடமும், பட்டாவும் வழங்கி அவர்களை குடியிருப்பு மாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் கூறுகையில், வகைப்பாடு மாற்றம் செய்து பட்டா வழங்க முன்மொழிவு அனுப்பப்பட் டுள்ளது, அனுப்பப்பட்ட முன்மொழிவுக ளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் அனைத்து கட்சிகள் கடந்த 2019 ஆகஸ்ட் 1ல் தெரிவித்த ஆட்சேபனைகளும் பதியப் பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட உள்ள பள் ளிக்கு முன்னுரிமை அளித்து அவ்விடத்தை ஒதுக்க வேண்டும் எனவும்,  அவ்விடத்தில் குடியிருப்பவர்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்கலாம் என்றும் போராட்ட குழு கோரிக்கையை திருப்பூர் வருவாய் கோட் டாட்சியருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட காங்கயம் காவல்துறை துணை கண்காணிப்பாளரும், பள்ளிக்கு முன்னு ரிமை கொடுத்து இடத்தை வழங்க திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் நேரிடையாக சென்று பேசுவதற்குத் தான் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்கள். இதையடுத்து அனைத்து கட்சி தலை வர்கள் கலந்து பேசி இன்று காலை 9 மணிக்கு ஊத்துக்குளி ஆர்எஸ்-ல் விளக்கக் கூட்டம் நடத்துவது என முடிவெடுத்துள் ளனர். பொதுமக்கள், பெற்றோர்கள் அனை வரும் இன்று காலை திட்டமிட்டபடி இக் கூட்டத்தில் பங்கேற்குமாறும் அரசியல் கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;