tamilnadu

img

அதிக ஊராட்சிகள் கொண்ட ஒன்றியங்களை பிரிக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநாடு கோரிக்கை

திருப்பூர், ஜூன் 23 – திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக் கையிலான ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாகப் பிரிக்கவும், அதிக வருவாய் கிராமங்களைக் கொண்ட ஊராட்சிகளையும் பிரிக்கவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 6ஆவது மாவட்ட மாநாடு பொங்கலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் ஆர்.ஞானசேகரன் தலைமை வகித்தார். பொங்கலூர் வட் டாரத் தலைவர் எம்.சிவக்குமார் வர வேற்றார். மாநில தணிக்கையாளர் எஸ். ராஜசேகர் மாநாட்டைத் தொடக்கி வைத் தார். மாவட்டச் செயலாளர் பி.செந்தில் குமார் வேலையறிக்கை முன்வைத்தார். மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன் வரவு செலவு அறிக்கை முன்வைத்தார். விவாதத்தைத் தொடர்ந்து அறிக்கை ஏற்கப் பட்டது. இம்மாநாட்டில், உள்ளாட்சித் தேர்தலை  உடனடியாக நடத்த வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றி யங்களில் பல பகுதிகளில் அதிக எண்ணிக் கையிலான ஊராட்சிகள் உள்ளன. அவற்றை பிரித்து தனி ஒன்றியங்களை உரு வாக்க வேண்டும். அதிக வருவாய் கிரா மங்கள் கொண்ட ஊராட்சிகளையும் தனி யாகப் பிரிக்க வேண்டும். அதன் மூலம் நிர்வாகத்தை மேம்படுத்துவதுடன், மக்களுக்கும் விரைந்து சேவை வழங்க  முடியும். அதேபோல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட் டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பதவி  உயர்வுப் பணியிடங்களை மாவட்ட நிர் வாகம் உடனடியாக நிரப்ப வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் து.இராஜகோபாலன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் க.சண்முகம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலை வராக ஆர்.ஞானசேகரன், துணைத் தலை வர்களாக பி.ரமேஷ்குமார், ஆர்.ஜெயப் பிரகாஷ், கே.சரவணன், ஈ.நல்லசேனாபதி, பி.ஜெயக்குமார், மாவட்டச் செயலாள ராக பி.செந்தில்குமார், இணைச் செய லாளர்களாக பி.தங்கராஜ், பி.செல்வராஜ், ஆர்.ரங்கசாமி, டி.செல்வராஜ், டி.சாந்தி, மாவட்டப் பொருளாளராக எம்.கண்ணன் உள்ளிட்டோர் நிர்வாகிகளாகத்  தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் 130 பேர்  பங்கேற்றனர். முடிவில் சங்கத்தின் மாநிலப்  பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ் மாநாட் டை நிறைவு செய்து உரையாற்றினார். மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர் எஸ்.வித்யா நன்றி கூறினார்.

;