tamilnadu

திருப்பூர் : கனரக, இலகுரக சரக்கு வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு

திருப்பூர், செப். 11- திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குள் வரும் கனரக மற் றும் இலகுரக சரக்கு வாகனங்கள் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் மாநகருக்குள் வரக் கூடாது என நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. எனினும் கொரானா நோய்த்தொற்று காரணமாக இந்த நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டு 2020 மார்ச் மாதம் முதல் மேற்படி நேரங்களிலும் சரக்கு வாகனங்கள் மாந கர எல்லைக்குள் வர அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்க ளும் பழைய நிலையில் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கன ரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் காலை  8 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மாநகர காவல் எல்லைக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள கால நேரங்கள் ஆம்புலன்ஸ், பொது மக்களின் அத்தியாவசிய தேவையான பால்வண்டி, மருந்து பொருட்கள் ஆகியவைகளை ஏற்றிச் செல்லும் வாக னங்களுக்கு இந்த தடை பொருந்தாது. நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக செல்லக்கூடாது. 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என மாநகரக் காவல் ஆணையர் கார்த்தி கேயன் கூறியுள்ளார்.

;