tamilnadu

திருப்பூர்: 300ஐ கடந்தது கொரோனா பாதிப்பு - கட்டுக்குள் இருப்பதாக ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தகவல்

திருப்பூர், ஜூலை 14 – திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை திங்க ளன்று 308ஆக உயர்ந்தது. எனி னும் கொரோனா தடுப்பு நட வடிக்கைகள் மேற்கொள்வதால், வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர்  க.விஜயகார்த்திகேயன் கூறியுள் ளார். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை திங்க ளன்று மாலை அரசு செய்திக்கு றிப்பின்படி 308 ஆக உயர்ந்துள் ளது. தற்போது மருத்துவமனைக ளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று திருப் பூர் தாராபுரம் சாலையில் உள்ள உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த க.விஜய கார்த்திகேயன் கூறியதாவது:  திருப்பூர் மாவட்டத்திற்கு வெளி யூர்களில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாது காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்குமே பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டு வருகி றது. மேலும் மருந்துக் கடைகள் மூல மாக காய்ச்சல் மருந்துகள் அதிக அளவில் விற்பனையான பகுதிக ளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வரு கிறது. எனவே, இந்த காரணங்க ளால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவல் கட் டுக்குள் இருக்கிறது என்று கூறி னார்.

ஆனால், நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்போர் எண்ணிக்கை இம்மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. அதேசமயம் கொரோனா பாதித்தோர் குடியிருப் புப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமே தொற்று பரிசோதனை செய்யப்படு கிறது. அப்பகுதியில் நெருக்கமான குடியிருப்புகளில் வசிப்போ ருக்கோ, நோய் பாதித்தோரின் தொடர்புகளில் இருப்போருக்கோ ஸ்வாப் பரிசோதனை செய்யப்படு வதில்லை. சுகாதாரத் துறை செவிலி யர்களை தொற்று பாதித்த குடி யிருப்புப் பகுதிகளில் அமர்த்தி காய்ச்சல், இருமல், சளி தொல்லை இருந்தால் மக்கள் மருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று மட்டும் கூறு கின்றனர். முறையான பரிசோ தனைகள் மிகவும் குறைவாக மேற்கொள்ளப்படுகிறது. எனினும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என உண்மைக்குப் புறம்பாக சொல்லி வருவதாக, கொரோனா பாதித்த பகுதிகளைச் சேர்ந்தோர் தெரிவிக்கின்றனர்.

;