திருப்பூர், மார்ச் 15- திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் பணியில் இருந்த காவலரை, மது போதை யில் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பெருமாநல்லூர் நான்கு வழிச் சாலை அருகே மதுபோதையில் ஹர்சன் மற்றும் அவரது நண்பர்கள் மது பாட்டில்களை கீழே போட்டு உடைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்துள்ளனர். இதையறிந்த பெருமாநல்லூர் காவலர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் சதீஷ் ஆகியோர் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை மேற்கொண் டுள்ளனர். அப்போது மது போதை யில் இருந்த ஹர்சன் மற்றும் அவரது நண்பர்கள் போலீஸாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு ஈஸ்வர மூர்த்தியை தாக்கிவிட்டு அவரது செல் போனையும் உடைத்துள்ளனர். இத னையடுத்து பெருமாநல்லூர் போலீசார் மதுபோதையில் இருந்த ஹர்சன், சிவகுருநாதன் மற்றும் யுவராஜ் ஆகிய 3 பேரையும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காவல் துறையினர் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். காயமடைந்த காவ லர் ஈஸ்வரமூர்த்தி அவிநாசி அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.