tamilnadu

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தருக வாலிபர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், மே 30 – திருப்பூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துக் கல்லூரி கட்டுமானத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் முதல்வர் மருத்துவர் வள்ளியிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் மாவட்டக்குழு சார்பாக  மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், ரத்த தானக் கழக  மாவட்டச் செயலாளர் துரை.சம்பத் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல மாவட் டங்களில் இருந்தும், நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் திருப்பூர் மாவட்டம் நோக்கி பிழைப்பு தேடி ஏராளமான தொழிலாளர்கள் வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்க்க பெரிதும் நம்பியிருப்பது மாவட்ட அரசு மருத்துவமனையை மட்டும் தான். தினம்தோறும் 4ஆயிரம் முதல் 5ஆயிரம் பேர் வரை புற நோயாளிகள், உள் நோயாளிகள் என சிகிச்சை பெற வருகிறார்கள். இவ்வளவு மக்களின் நோய் தீர்க்கும் மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும், உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் கருவிகள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதும் மருத்துவமனையை நம்பி வரும் மக்களை ஏமாற்றமடைய செய்கிறது. தற்போது பரவிவரும் கொரோனா தொற்றை மேலும் பரவாமல் தடுக்க தங்களை பற்றி கவலைப்படாமல் போராடி  வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழி யர்களின்  உயிர் காக்கத் தேவையான பாதுகாப்பு உபக ரணங்கள் வழங்க வேண்டும்.

செவிலியர்கள், மருத்துவ மனை ஊழியர்களுக்கு தரமான  உணவுகளை வழங்கிட வேண்டும். மருத்துவர்கள்,  செவிலியர்கள், ஊழியர்கள் பயன்படுத்தும் ஆடைகள், மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். சிகிச்சை பெற வருபவர்களுக்கு நோய் தொற்று பர வாமல் தடுக்க பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி களைச் செய்து கொடுத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவமனையில் தற்போது செவிலியர்கள் பற்றாகுறையாக இருப்பதால் வேலை வாய்ப்பு அலுவலகங் களில் பதிவு செய்து காத்திருக்கும் செவிலியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். ரத்த வங்கிக்கு தேவை யான ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட குளிர்சாதன வசதி மற்றும் ரத்தம் வழங்க வரும் கொடையாளருக்கு சான்றிதழ்களை தடையில்லாமல்  வழங்கிட வேண்டும். இம்மாவட்டத்தின் தன்மையை கருத்தில் கொண்டு புதி தாக கட்ட உள்ள மருத்துவக் கல்லூரி கட்டடத்தை தேவை யான உள் கட்டமைப்பு வசதியுடன் அமைத்திட வேண் டும் என்று மனுவில் கோரியிருந்தனர். இந்த கோரிக்கைகளைக் கேட்டறிந்த மருத்துவமனை முதல்வர் மருத்துவர் வள்ளி  தேவையான நடவடிக்கைகளை செய்வதாக உறுதியளித்தார்.

;