tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி திட்டம் நவீன வணிக வளாகம் அமைப்பதற்காக ஒரே நாளில் தகர்க்கப்பட்டது 86 ஆண்டு கால பூமார்க்கெட்

திருப்பூர், ஜன. 23 - திருப்பூரில் 86 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த பூமார்க்கெட் ஒரே நாளில் தகர்க்கப்பட்டது. இந்த  இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்  நவீன வணிக வளாகம் அமைக்கப் படுகிறது. திருப்பூர் ஈஸ்வரன் கோயில்  வீதி, காமராஜர் சாலை சந்திப்பில் பூ மார்க்கெட் அமைந்திருந்தது. இங்கு  சுமார் 100 கடைகள் செயல்பட்டு வந்தன. 1934ஆம் ஆண்டு இந்த  சந்தை அமைக்கப்பட்டது. ஆரம் பத்தில் தினசரி சந்தையாக செயல் பட்டு வந்த இடம் காலப்போக்கில் பூ மார்க்கெட்டாக மாற்றமடைந்தது. நகரின் மையப் பகுதியில் அரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மார்க்கெட் அருகில் பெரு மாள் கோவில், ஈஸ்வரன் கோவில் ஆகியவை இருப்பதுடன், பேருந்து  நிலையம் அருகில் அமைந்திருந் ததால் கோயிலுக்கு வரும் பக்தர் களுக்கும், சில்லரை பூ விற்பனை யாளர்களுக்கும் மிகவும் வசதியாக இருந்தது.  இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தில் சுமார் ரூ.4.50 கோடியில்  நவீன வணிக வளாகம் அமைப் பதென மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இந்த வணிக வளா கத்திலேயே வாகன நிறுத்தம், கழிப்பிட வசதி, கேண்டீன் வசதி ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டு, ஈஸ்வரன் கோயில் வீதியில் வாகன நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க திட்ட வரைபடம் தயா ரிக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வா கத்தினர் தெரிவித்தனர். அதேசமயம் பல ஆண்டு கால மாக இங்கு பூ வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யாமல் இங்கி ருந்து காலி செய்யச் சொன்னதால் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும், புதிய வணிக வளாகம் கட்டி முடிக்கும்போது அங்கு ஏற்கெனவே இருந்த வியா பாரிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். எனினும் மாநகராட்சி சார்பில் பல்லடம் சாலையில் பழைய மாவட்ட ஆட்சியரகம் செயல்பட்ட காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட் செயல் பட இடம் ஏற்பாடு செய்து தருவ தாகவும், புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்தில் இடம் வழங்கு வது பற்றி இப்போது உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறப் பட்டதாகவும் தெரிகிறது. கடந்த தீபாவளி பண்டிகை சமயத்திலேயே பூ வியாபாரிகளை காலி செய்யச் சொல்லி இங்கிருந்த கடைகளை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் ஆயத்தமானது. அதே சமயம் வியாபாரிகள் மாற்று இடம் கோரிய நிலையில், காட்டன் மார்க்கெட் வளாகத்துக்குச் செல்வ தற்கு டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பண்டிகை வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வியாபாரிகள் தொடர்ந்து இந்த வளாகத்தில் பூ வியாபாரம் செய்து வந்தனர். தற்போது பொங்கல் பண்டிகை  முடிவுற்ற நிலையில் வியாழக் கிழமை ஏராளமான காவலர் படை  பூ மார்க்கெட்டை சுற்றி குவிக்கப் பட்டனர்.  திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கடைகளை  இடிக்கும் பணி தொடங் கியது. இதையடுத்து அங்கிருந்த வியாபாரிகள் தங்கள் உடமை களை எடுத்துக் கொண்டு தயக் கத்துடன் வெளியேறினர். 86 ஆண்டு கால வரலாறு கொண்ட பூமார்க்கெட் வளாகம் ஒரே நாளில் முழுமையாக இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது, இங்கு செயல் பட்ட வியாபாரிகளுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கெனவே திருப்பூர் நகராட்சி யாக இருந்தபோது சுமார் 15 ஆண்டு களுக்கு முன்பு (2001 - 06) பூ  மார்க்கெட் வளாகத்தை டுபிட்கோ  எனும் மாநில அரசின் நிதி ஒதுக் கீட்டில் நவீன வணிக வளாகமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. அப்போது வியாபாரிகளிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டது. எனினும் ஒவ்வொரு முறை மாநகர வளர்ச்சித் திட்டம் எனும்போதும் புதிதாக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கு மாறாக, பழைய  இடங்களையே இடித்துவிட்டு புதிய தோற்றத்தை ஏற்படுத்துவது உண்மையான வளர்ச்சிக்கு உரிய தாக இல்லை. சிறு, நடுத்தர வியா பாரிகளை பாதிக்கக்கூடியதாகவே இந்த வளர்ச்சித் திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன, தற்போது இடிக்கப்பட்ட பூமார்க்கெட் மட்டு மின்றி, தினசரி மார்க்கெட், வாரச் சந்தை ஆகியவையும் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பட்டி யலில் உள்ளன. முற்றிலும் வணிக நோக்கிலேயே அரசு நிர்வாகம் இத்தகைய செயலைச் செய்கிறது என்பது திருப்பூர்வாசிகளின் அனுப வமாக உள்ளது.  (ந.நி)

;