tamilnadu

img

தொழிலாளர்களைப் பழிவாங்கும் தனியார் நிறுவனம் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 11 -  தனியார் நிறுவனத்தால் பழிவாங்கப்பட்டு ஊழியர் கள் பணிநீக்கம் செய்யப் படுவதைக் கண்டித்து திருப்பூரில் 108 ஆம்பு லன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.   திருப்பூர் குமரன் நினை வகம் முன்பாக செவ்வா யன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான 108 ஆம்புலன்ஸ் தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியோர் கூறுகையில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை  வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகம்  முழுவதும் 4500-க்கு மேற்பட்ட தொழி லாளர்கள் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். இந்த சேவையை ஜிவிகே இஎம்ஆர்ஐ எனும் தனியார் நிறுவனம், தமிழக அரசிடம் 100 சதவிகித நிதியை பெற்று நிர்வகித்து வரு கிறது. ஆனால் இந்த நிர்வாகம் தொழி லாளர்களுக்கும், சேவைக்கும் முக்கியத் துவம் கொடுக்காமல் லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்து சேவையை சீர் குலைத்து வருகிறது என்றனர்.  மேலும், தனியார் நிறுவனத்தின் ஊழல் களை வெளிக்கொண்டுவரும் தொழி லாளர்கள் திட்டமிட்டு பழிவாங்கப் படுகிறார்கள். ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவ னத்தின் தொழிலாளர் விரோத நடவ டிக்கைகள், பொதுச் சேவையை சீர் குலைக்கும் நடவடிக்கைகள் அம்பலப் பட்டு விடும் என்பதால் ஜிவிகே இஎம்ஆர்ஐ  நிர்வாகம் 112 தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்து, தொழி லாளர் உதவி ஆணையரிடம் அனுமதி கோரி இருந்தது. தற்போது இந்த சட்டவிரோத வேலை நீக்க அனுமதியை ரத்து செய்து, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு பணி மற்றும் சம்பளம் வழங்காமல் திட்ட மிட்டே பழிவாங்குகிறது. தொழிற்தகராறு  சட்டப்பிரிவின் கீழ், உத்தரவு பெற்ற தொழி லாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். தொடர்ந்து தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஜிவிகே இஎம்ஆர்ஐ நிர்வாகம் பணி வழங்க  மறுப்பதை கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் பேசியோர் தெரிவித்தனர்.  இதில் கோவை மண்டலத் தலைவர் சரவணன், கோவை மண்டல செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;