tamilnadu

img

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் குவிந்த மாணவர்கள்

திருப்பூர், பிப். 1 - திருப்பூர் புத்தகத் திருவிழா வில் மூன்றாம் நாளான சனிக் கிழமை பள்ளி மாணவ, மாணவி கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு பிடித்த புத்தகங் களை வாங்கிச் சென்றனர். 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா 2020 கடந்த வியாழக் கிழமை தொடங்கியது. சனிக் கிழமை புத்தகத் திருவிழாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிக ளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் ஆர்வத்து டன் புத்தகக் கடைகளுக்குள் நுழைந்து தங்களுக்கு விருப்ப மான புத்தகங்களை வாங்கினர். புத்தகத் திருவிழா செய்தியை நகர மக்களுக்குக் கொண்டு சேர்க் கும் நூதன முயற்சியாக புத்தகத் திருவிழா பற்றிய விளம்பரம் அடங் கிய பேட்டரி கார் ஒன்று நகருக் குள் வலம் வர ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. சனிக்கிழமை புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுத் தலை வர் மோகன் கே.கார்த்திக் இந்த வாகனத்தைத் தொடங்கி வைத் தார். அதேபோல் புத்தகத் திருவிழா வளாகத்தில் அனைவரையும் ஈர்க் கக்கூடியதாக செல்பி வளாகம் அமைந்துள்ளது. இதில் மாணவர் ஒருவர் புத்தக மரத்துக்குக் கீழே நின்று, பட்டம் போல் உலகத்தை இழுக்கும் காட்சி அழகுடன் வடிவ மைக்கப்பட்டுள்ளது. புத்தக மரத் தில் உலகப் புகழ்பெற்ற மேதைகள் பலரது நூல்கள் பூத்துக் காய்த்து தொங்குவது போன்ற காட்சி எழி லுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே நின்று ஏராளமா னோர் செல்பி எடுத்துச் சென்ற னர்.
ஊரழைப்பு நிகழ்ச்சி
அத்துடன் திருப்பூர் நகரின் வியாபாரிகள், வர்த்தகர்கள் மத்தி யில் புத்தகத் திருவிழாவிற்கு வரு மாறு அழைப்பு விடும் வகையில் ஊரழைப்பு எனும் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வு நடத்தப்பட் டது. இதில், புத்தகத் திருவிழா வர வேற்புக்குழுவினர் நாதஸ்வர இசை முழக்கத்துடன் புது மார்க் கெட் வீதியில் சென்று அனைத்து ஜவுளி, நகை மற்றும் எலக்ட்ரானிக் உள்ளிட்ட கடைகளில் அழைப் பிதழ் கொடுத்தனர். அத்துடன் பழைய பேருந்து நிலையத்திற் குள் சென்று அங்கு நிறுத்தி வைக் கப்பட்டிருந்த பேருந்துகளிலும் ஏறி பயணிகளிடம் அழைப்பிதழ் கொடுத்து புத்தகக் கண்காட்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்ச்சி பொது மக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பைப் பெற் றது.

;