tamilnadu

இன்று வளைய சூரிய கிரகணம் திருப்பூரில் காண சிறப்பு ஏற்பாடு

திருப்பூர், டிச. 25 - வியாழனன்று (டிச.26) வளைய சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில், திருப்பூரில் இந்த கிரகணத்தைக் காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 வரை அவிநாசி அணைப்புதூர் அருகே பழங்கரையில் அமைந்துள்ள டீ பப்ளிக் பள்ளி, பல்லடம் சேடபாளை யத்தில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, திருப்பூர் மங்கலம் சாலை டைமண்ட் தியேட்டர் எதிரில் கே.ஆர்.சி. சிட்டி சென்டர், திருப்பூர் எஸ்ஏபி தியேட் டர் பின்புறம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அங்கேரிபாளையம் சாலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் அமுதா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, திருப்பூர் மேட் டுப்பாளையம் வெங்கடேசபுரம் அறிவியல் வள மையம், தாராபுரம் ரோடு பெரிச்சிபா ளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் மூலனூர் பிஎஸ்என்எல்  அலு வலகம் எதிர்புறம் குட் சாய்ஸ் டியூசன்  சென்டர், அவிநாசி கோவை சாலை எல்ஐசி பில்டிங் எதிரில் ராசப்பன் காம்ப்ளக்ஸ், அவிநாசி அரசு கலைக்கல்லூரி தென்புறம் அபிராமி கார்டன் ஆகிய இடங்களில் சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பாகக் காணலாம். அதற்குரிய சூரிய கண்ணாடி ரூ.20 விலையில் விற்பனை செய்யப்படு கிறது.  இது தொடர்பாக கூடுதல் விபரங்க ளுக்கு, 95665 85488, 97860 73353, 94430 24086, 90953 39097 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்ட மையம் இத்தகவலைத் தெரிவித் துள்ளது.

;