tamilnadu

சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

அவிநாசி, அக்.7- அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே சாலை யோரம் வளர்க்கப்பட்டு வந்த மரங்களை வெட்டி சாய்த்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி பழைய பேருந்து நிலை யம், சார் பதிவாளர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் நிழல் தரும் வகையில் அரசமரம், புங்க மரம் உள்ளிட்ட மரங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பல வருடமாக இருந்து வந்த அந்த இரண்டு மரங்களும் ஞாயி றன்று வெட்டி சாய்க்கப்பட்டது. இந்த மரங்களை வெட்டி சாய்த்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.