tamilnadu

img

போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி - காவல்துறையினர் விசாரணை

அவிநாசி, செப். 3- போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி நடைபெற்றது குறித்து அவிநாசி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்ற னர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள எண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (28).  இவர் தனது தந்தை விநாயகம் நடத்தி வந்த டிரான்ஸ்போர்ட் தொழிலை கவனித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக தொழிலில் ஏற்பட்ட முடக்கத்தால் சிரமப்பட்டு வந்த இவர் தொழில் வளர்ச்சிக்காக தனது நண்பரான ரியல் எஸ்டேட்  நடத்திவரும் ஜாகிர் உசேன் என்பவரிடம் பத்திரத்தின் பெய ரில் ரூ.3 கோடி கடன் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.  இதையடுத்து ஜாகிர் உசேன், கோவையைச் சேர்ந்த  ஹரீஸ் ஆச்சார்யா என்பவரை அறிமுகம் செய்து வைத்துள் ளார். இதைத்தொடர்ந்து ஹரீஸ் ஆச்சார்யா ரூ.3 கோடி கடன் தருவதாக ஒப்புக்கொண்டு, பிராபகரனிடம் ஐந்து 100  ரூபாய் முத்திரைத் தாள்கள், 5 காசோலைகள்,  6 போட் டோக்கள் மற்றும் ஆவண கட்டணமாக 9 லட்சத்து 90 ஆயி ரம் ரூபாயும் கொண்டு வரும்படி கூறியுள்ளார்.

இதனை யடுத்து, ஆகஸ்ட் 17 ஆம் தேதி கோவையில் பணத்தை பெற்றுகொண்ட ஹரிஷ் ஆச்சார்யா, பிரபாகரனிடம் ரூ.2 கோடியே 10 லட்சம் கொடுத்து, மீதத் தொகையை திண்டி வனத்தில் பத்திரப்பதிவு நடக்கும்போது கொடுத்து விடு கிறேன் எனக் கூறியுள்ளார்.  இதையடுத்து சொந்த ஊருக்குத் திரும்பிய பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் ஹரிஷ் ஆச்சாரியாவை தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.  இதனால் சந்தேகம் அடைந்த பிரபா கரன் மற்றும் நண்பர்கள் பெட்டியைத் திறந்து பார்த்தபோது ரூபாய் நோட்டுகள் அனைத்தும் போலி நோட்டுகள் என்பது  தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, பிரபாகரன் அவிநாசி காவல் நிலையத்தில் தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக புகார் அளித்து ரூ.2 கோடியே 10 லட்சம் போலி ரூபாய் நோட்டுகளைப் போலீசாரிடம் ஒப் படைத்தார். இதனிடையே, சென்னை டிரான்ஸ்போர்ட் அதிபரின் மனைவி ஜெனிபர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப் படையில் அவிநாசி போலீசார் கோவையைச் சேர்ந்த ஹரிஷ் ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைத் துள்ளது குறிப்பிடத்தக்கது.

;