அவிநாசி, மார்ச் 8- அவிநாசி அருகே நடுவச்சேரி பகுதியில் பழு தடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதிமக்கள் வெள்ளியன்று உதவி மின் பொறி யாளரிடம் மனு அளித்துள்ளனர். அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட நடுவச்சேரி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பழமை வாய்ந்த அம்மன் கோவில் அருகாமையில் பழு தடைந்த மின் கம்பம் உள்ளது. இதனால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே பழுதடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றிய மைக்கக் கோரி அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் உதவி மின் பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர். இதேபோல் அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட முத்து செட்டி பாளையம் பகுதியில் சாலை நடுவில் இருக்கும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஞாயிறன்று கையெழுத்து இயக்கம் நடத்தினர்.