அவிநாசி, ஜூன் 2-அவிநாசி அடுத்த சின்ன கானூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.அவிநாசி ஒன்றியம், சின்னகனூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.பல வருடங்களாகசெயல்பட்டுவரும்பள்ளியின் மேற்கூரையிலுள்ளமரச்சட்டங்கள் பழுதடைந்து மிகவும் அபாயகரமாக உள்ளதாக தெரிகின்றது. இதனால் படிக்கின்ற குழந்தைகளுக்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளதாகபொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையீடு செய்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை புகைப்படம் எடுத்து மனுவாக கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து தற்காலிக நிவாரண ஏற்பாடு செய்து கொடுப்பதாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அறிவித்து உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.