tamilnadu

வெள்ளகோவில் அருகே மாசு ஏற்படுத்தும் குவாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச்.10- வெள்ளகோவில் அருகே மாசு ஏற்படுத்தும் குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப் போது சிபி கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கவுண் டச்சிபுதூர் ஊராட்சி சிபி கார்டன் மனைப் பிரிவில் இதுவரை 50 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2012-ல் போடப்பட்டது. இது வரை முறையான  பொது உபயோகத்திற்குரிய இடம் ஒதுக்கப்பட வில்லை. 58 சென்ட் இடம் பொது உபயோகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதி கள் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னர்.
குவாரி மீது நடவடிக்கை 
வெள்ளகோவில் கணபதிபாளையம் ஏ.பி.புதூர், கே.மணி குறிஞ்சித்தோட்டக்கலை என்பவர் கொடுத்த மனுவில், காங்கேயம் வட்டம் வெள்ள கோவில் நகராட்சி நாச்சிபாளையத்தில் வீரா புளுமெட்டல் கல்குவாரி இ்யங்கி வருகிறது. அதில் இருந்து வெளியேரும் புகை காற்றில் கலந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பரவி வருகிறது. இதனால் அரு கில் உள்ள ஊர்களான நாச்சிபாளையம், புள்ளசெல்லி பாளையம், கரட்டுபாளையம், காளிமூப்பன்பதி உள் ளிட்ட பகுதியில் உள்ள நீர்நிலைகள், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.  இந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதி காரிகள் இந்தக் குவாரியை இயங்க அனுமதியளித் துள்ளனர். எனவே இது தொடர்பாக ஆய்வு மேற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டனர்.

;