tamilnadu

img

பிளஸ் 2 பொதுத்தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 23, 376 பேர் எழுதினர்

திருப்பூர், மார்ச் 2 – பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்க ளன்று தொடங்கிய நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 23ஆயி ரத்து 376 பேர் இத்தேர்வை எழுதினர். பதிவு செய்தவர்களில் 1190 பேர் தேர்வெழுதவில்லை. தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை நடத்தும் பிளஸ்-2 பொது தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங் கியது. திருப்பூர் மாவட்டத்தில் 85 தேர்வு மையங்களில் 211 மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 ஆயிரத்து 82 மாணவர்களும், 13ஆயிரத்து 527 மாணவிகளும் என மொத்தம் 24ஆயிரத்து 609 மாணவ, மாணவிகளும், தனித் தேர்வர்கள் 340 மாணவ, மாணவி யர்களும் ஆக மொத்தம் 24ஆயி ரத்து 949 பேர் தேர்வெழுத விண் ணப்பித்திருந்தனர். இதில் திங்களன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. தனித் தேர்வர்கள் 117 பேர் உள்ளிட்ட 24 ஆயிரத்து 566 பேர் விண்ணப் பித்திருந்தனர். இவர்களில் 23 ஆயிரத்து 376 பேர் தேர்வு எழுதி னார்கள். 23 தனித்தேர்வர்கள் உள்பட ஆயிரத்து 190 பேர் தேர்வு எழுதவில்லை. காயமடைந்தோர் மற்றும் கண் பார்வையற்றோர், மனநலம் குன்றிய  மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். தேர்வு நடைபெறும் மையங்களுக்குள் வெளி நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந் தது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதியோரை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் உடனி ருந்தார்.

;