tamilnadu

img

விளைநிலத்தில் பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

திருப்பூர், ஆக.31 – திருப்பூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் பதிக்கும் ஐடிபிஎல் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து சனியன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பாரத் பெட்ரோலிய நிறுவனத் தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயி கள் கூட்டமைப்பு சார்பில் சிவன்மலை பகுதியில் இந்த கையெழுத்து இயக் கம் தொடங்கப்பட்டது. கையெழுத்து இயக்கத்தை திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தொடங்கி வைத்தார். மேலும் கையெழுத்து இயக்கத் துக்கு வலுசேர்க்கும் விதமாக  காங்கி ரஸ் மாவட்டத் தலைவர் கோபி, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், காங்கே யம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப் பாளர் பி.பி.அப்புக்குட்டி, மதிமுக ஒன் றியச் செயலாளர் மணி, தமாகா காங் கேயம் வட்டாரத் தலைவர் தனபால் சாமி, புரட்சிகர இளைஞர் முன்னணி கவி, உயர் மின்கோபுரங்களுக்கு எதி ரான இயக்கத்தைச் சேர்ந்த முத்து விஸ்வநாதன், விவசாயிகள் பாது காப்புச் சங்கத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம், கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொன்னுசாமி, வழக்குரைஞர் ஈசன்,  தற்சார்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கி.வெ.பொன்னையன், சேமூர் வெங்கடாசலம், ஒட்டவலசு பாலசுப்பிரமணி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். முக்கிய நிர்வாகிகள் விவசாயிகள் கையெ ழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரி வித்து உரையாற்றினர். இயக்கத்தின் பரப்புரைக்கு பயன்படும் வகையில் கை ஒலிபெருக்கி ஒன்றை படியூர் விவசாயி இராஜக்கனி புதிதாக வாங்கி நிகழ்ச்சியில் கொடையளித்தார். இந்நிகழ்ச்சிக்கு ஐடிபிஎல் திட் டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்  கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் அலகுமலை பாலசுப்பி ரமணி தலைமை தாங்கினார். கூட்ட ஏற்பாடுகளை ஜெயப்பிரகாசு, மூர்த்தி, கார்த்தி ஆகியோர் இணைந்து ஒருங் கிணைத்தனர்.