tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மனு

அவிநாசி, ஜன‌. 26- அவிநாசி பகுதியில் உள்ள  ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம் 31 ஊராட் சிகளை உள்ளடக்கியது. இந்த நிலையில் குடியரசு தினமான ஞாயிறன்று ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள்  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வேலாயுதம் பாளையம், செம்பியநல்லூர், கரு வலூர், போத்தம்பாளையம், புதுப் பாளையம், வடுகபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அறி வித்துள்ள பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றுமாறு மனு அளித்த னர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்டை யம்பாளையம் அலுவலகம் முன்பு குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றப்பட்டது. இதில் அவிநாசி ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம் தலைமையில் சிஐடியு நிர்வாகிகள் சண்முகம், கனகராஜ், வேலுச்சாமி உள்ளிட் டோர் உறுதிமொழி ஏற்றனர்.

;