அவிநாசி, நவ. 5- வஞ்சிபாளையம் உயர்நிலைப் பள் ளியினை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. அவிநாசி ஒன்றியம், புதுப்பாளை யம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிபா ளையத்தில் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளி யில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சுற்றுவட்டார கிராமங்க ளிலிருந்து பயின்று வருகின்றனர். 11, 12 ஆம் வகுப்பு படிப்பதற்கு இப் பகுதியிலிருந்து அவிநாசி பகுதிக்கு வருவதால் மாணவ, மாணவிகள், வெகு சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் வஞ்சிபாளையம் உயர் நிலைப் பள்ளியாக இருப்பதை மேல் நிலைப் பள்ளியாக மாற்றி அமைக்க வேண்டும் என சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைய னிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன், திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினர் பி.முத்து சாமி ஆகியோர் மனு அளித்தனர்.