tamilnadu

img

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு

 அவிநாசி, ஜூலை 29- அவிநாசி அடுத்த கருமாபாளையத்தில் புதிதாக அமைய  இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித் தனர். அவிநாசி ஒன்றியம், கருமாபாளையம் ஊராட்சிக் குட்பட்ட ஸ்ரீராம் நகர், ராயர் நகர், தண்ணீர்பந்தல் காலனி, இ.பி காலனி, எஸ்.பி.காலனி, மேஸ்திரி காலனி ஆகிய பகுதி மக்கள் வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். அம்மனுவில் கூறியிருப்பது, கருமாபாளை யம் பகுதியில் 450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நெல்லை பேக்கரி அருகாமை யில் டாஸ்மாக் கடை அமைய இருக்கிறது. இதனால் பள்ளிக்  குழந்தைகள், மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி அவிநாசி சேவூர் செல்லும் பிரதான சாலை என்பதால் விபத்துகள் ஏற்ப வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடையை அமைக்க இருப்பதை நிறுத்தம் செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

;