tamilnadu

சீரான மின்சாரம் விநியோகிக்க கோரி மனு

அவிநாசி, மே 30- அவிநாசி அருகே நியூ டவுன் பகுதியில் சீரான மின் சாரம் வேண்டி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் வெள்ளி யன்று மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட நியூ டவுன் பகுதி யில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சீரற்ற முறையில் விநியோகப்படும் குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்து வருகின்றன. இது குறித்து பலமுறை குடியிருப்போர் நல சங்கத்தின் மூலமாக மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவித்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.  இந்நிலையில் அப்பகுதியில் மின் மாற்றி அமைத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டி  நியூ டவுன் குடியிருப்போர் நல சங்கத்தினர் அவிநாசி மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.