tamilnadu

img

முடங்கிக்கிடக்கும் பணிகளால் அவதிக்குள்ளாகும் மக்கள் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த கோரிக்கை

அவிநாசி ஒன்றியமா னது இரண்டு பேரூ ராட்சி, 31 கிராம பஞ்சாயத்துகள் உள்ளடக்கிய பகுதியாக செயல்பட்டு வருகிறது. இதில் பழங்கரை, வேலாயு தம்பாளையம், சேவூர், முறியா டபாளையம் ஆகியவை  மக்கள் தொகை அதிகமிக்க ஊராட்சி யாக இருந்து வருகிறது. இதில் அவி நாசி பேரூராட்சியை நகராட்சி யாக தரம் உயர்த்தவும், பழங்கரை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தவும், சேவூரை தனி ஒன்றிய மாக அறிவிக்கவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை களை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, அவிநாசி பேரூராட் சியை பொருத்தவரை 18 வார்டுகள்  கொண்ட பேரூராட்சியாக இருந்து  வருகிறது. ஆகவே, அவிநாசியை  நகராட்சியாக தரம் உயர்த்துவதற் காக போதிய கட்டமைப்பு வசதிகள், மக்கள் தொகை நெருக்கம் ஆகி யவை இருந்தபோதும் அதனை நகராட்சியாக மாற்றுவதில் அரசு நிர்வாகம் தயக்கம் காட்டி வருகின் றது.  இதேபோல், சேவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 31 கிராம பஞ்சா யத்துகள் செயல்படுகின்றன. சேவூர் பகுதியைச் சுற்றிலும் உள்ள 13 ஊராட்சிகளை செயல்படுத்தினால் தனி ஒன்றியமாக அறிவித்து மக்க ளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெருமளவு நிவர்த்தி செய்திட முடியும். இத்தகைய கோரிக்கைகள் தொடர்ந்து எழுப் பட்டு வரும் சூழலில் கடந்த மூன் றாண்டுகளாக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாததன் காரண மாக உள்ளாட்சி நிர்வாகங்கள் அனைத்தும் முடங்கி சமீபகாலமாக மக்களுக்கு தேவையான எத்தகைய அடிப்படை வசதிகளையும் மேம் படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின் றனர். இதுகுறித்து அவிநாசி பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் கூறு கையில், மக்கள் பிரதிநிதிகள் இருந்தபோது ரேசன் கார்டு, ஆதார் அட்டை, அரசுத்துறை சார்ந்த  வேலைகள், குடிதண்ணீர் பிரச் சினை, சாக்கடை  மற்றும் மின் இணைப்பு பிரச்சனைகள் போன்ற வைகளை உள்ளாட்சி மன்ற  மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவிக் கும்போது, வேலைகளை சுலபமாக செய்து தருவார்கள். இதனால் இப் பிரச்சனைகள் அனைத்தும் உட னுக்குடன் சரிசெய்திட முடிந்தது.  ஆனால், தற்போது மக்கள் பிரதி நிதிகள் இல்லாத சூழ்நிலையில் கிராமப் பஞ்சாயத்துகளில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும், வட்டார வளர்ச்சி ஆணையர்களும் தான் தனி அலுவலராக செயல் பட்டு வருகிறார்.  இவர்களால் மேற்கூறிப்பிட்ட பெரும்பகுதியான வேலைகளை உடனுக்குடன் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி யுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணிகள் அனைத் தும் அறைகுறையாய் நிற்பது டன், அதுகுறித்து அவர்களிடம் முறையிட முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது.  குறிப்பாக, அவிநாசி மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகள் அனைத்திலும் குப்பைகள் அப்புறப்படுத்தப்படாதது, சாக்க டைகள் தூர்வாரப்படாதது உள் ளிட்டவைகள் காரணமாக கடுமை யாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்ற னர். இதேபோல், குடிநீர் தட்டுப் பாடு என்பது சமீப காலமாக அனைத்து பகுதி மக்களையும் பாதிக்கக்கூடிய பிரச்சனையாக தலைவிரித்தாடுகிறது. இதே போன்று பெரும்பாலான சாலைகள் அனைத்தும் பழுதடைந்து பய ணிக்கவே முடியாத நிலையில் இருந்து வருகிறது. இதையெல்லாம் சரிசெய்ய அதிகாரிகளுக்கும் நேரமில்லை. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளிடமும் முறையிட முடி யாத சூழல் இருந்து வருகிறது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.   இதுகுறித்து பழங்கரை ஊராட்சி  மன்றத்  முன்னாள் தலைவரான எம்.பழனிச்சாமி தெரிவிக்கையில். பழங்கரை ஊராட்சியை பொறுத் தவரையில் நிரந்தரமான ஊராட்சி செயலர் இல்லை. முன்னர் நான்  ஊராட்சி மன்ற தலைவராக இருந்த போது இந்த ஊராட்சியானது சிறந்த ஊராட்சி மன்றத்திற்கான விருதுகளை பெற்றது. ஆனால், தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி மிக மோசமான ஊராட்சியாக மாறி வருகிறது. ஏனெ னில், குடிதண்ணீர் பிரச்சனை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை  பிரச்சனைகளைக் கூட  தீர்க்க முடியாத அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறது. ஆகவே, மக்களின் அடிப்படை பிரச்சனையை தீர்க்க விரைவில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.  பூண்டி பேரூராட்சி 4 ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் எஸ். சிவகாமி கூறுகையில், திருமுருகன் பூண்டி பேரூராட்சியில் மக்கள் பிரதிநிதியாக பணி செய்தபோது மக்கள் தேவைக்காக  ரூ.2  கோடி அளவிற்கு நிதி பெற்றுத் தந்து மக்க ளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தோம். ஆனால், தற்போது வீடுகளுக்கு குடி நீரானது பத்து நாளைக்கு ஒரு முறை தான் வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சாக்கடை வசதி, சாலை வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும், மக்களின் தேவைகளும் நிறைவேற்றப்பட வில்லை.  மக்கள் பிரதிநிதிகள் இருந்தபோது பேரூராட்சி கூட்டத் தில் மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை எடுத்துரைத்து, அதற்கு தேவையான நிதிகளை பெற்று அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் சூழல் இருந்தது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் போராடுகின்ற நிலைக்கு பொதுமக்களும், அரசி யல் கட்சியினரும் தள்ளப்பட்டுள் ளனர். இந்த நிலையை மாற்ற உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  புதுப்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள்  பி.முத்துச் சாமி, கே. முருகன் ஆகியோர் கூறு கையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கடுமையான குடிதண்ணீர் பிரச்சனை நிலவி வந்தது. இதை யொட்டி பொதுமக்கள் பங்கேற்கும் தர்ணா போராட்டம் அறிவித்திருந்த நிலையில் காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப் படை தேவைகளை பூர்த்தி  செய்கிறோம் என்ற உறுதிமொழி யின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இன்று வரை அதிகாரிகள் அளித்த உறுதி மொழி காப்பாற்றப்படவில்லை. குறிப்பாக, வஞ்சிபாளையத்தில் ஒரு பகுதிக்கு மட்டும் குடிநீர் விநி யோகம் இருந்து வரும் நிலையில், மற்றொரு பகுதியில்  எட்டு நாட்க ளாகியும் குடிநீர் விநியோகிக்கப் படுவதில்லை. ஆனால், ஊராட்சி மன்றங்கள் செயல்பாட்டில் இருந்த போது குடிநீர் பிரச்சினை என்பதே பெருமளவு இல்லை. தற்போது குடி நீருக்காக நாள்தோறும் மக்கள் போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள் ளனர் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். வடுகபாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கௌரி மணி,  முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் ஆர். பழனிச்சாமி, கே. ராமசாமி ஆகியோர் கூறுகையில், கடந்த காலங்களில் ரூ.26 லட்சத் திற்கும் மேல் நிதியை பெற்று மக்க ளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தோம். ஆனால், தற் போது குடிநீர் பற்றாக்குறை, பழு தடைந்த சுகாதார வளாகம், கட்டிய பொதுக்கழிப்பிடம் திறக்காமல் இருப்பது, பழுதடைந்த சாலைகள், சாக்கடைகளை புதுப்பித்து தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை போராடிப் பெறும் சூழ்நிலை உரு வாகியுள்ளது என தெரிவித்தனர். வேலாயுதம்பாளையம் முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியப்பன் கூறுகையில், மங்கலம் ரோடு பெரிய கருணை பாளையம், சின்னகருணை பாளையம் ஆகிய பகுதிகளில் சாலை வசதிகளை புதுப்பித்து தர வேண்டும். சாக்கடை வசதி இல்லாமல் அப்பகுதியினர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், குடிநீரை இன்றைய மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப விநி யோகிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றோம். இதற்கும் வேலாயுதம்பா ளையம் ஊராட்சி வழியாக மூன்றா வது குடிநீர் திட்ட குழாய் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து இணைப்பு பெற்று இப்பகுதி மக்களுக்கு போதியளவு குடிநீர் வழங்க வேண்டும் என தொடர்ந்து முறையிட்டு வருகின்ற போதும் அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருந்து வரு கிறது. இதனால் எதுவுமே போராடி பெறுகின்ற நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கின்றோம். ஆகவே, இப்பிரச்சனைகளை களையக் கோரி விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை  மாநாடு, பொதுக்கூட் டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.  இதேபோல், அவிநாசி பேரூ ராட்சி முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் வி. தேவி கூறுகையில், தற் போது அரசு நிர்வாகம் வரி விதிப்புகளை அதிகப்படுத்தி யுள்ளது. ஆனால், மக்களின் அடிப் படை பிரச்சனைகள், கோரிக்கை கள் மட்டும் குறைந்தபாடியில்லை. குறிப்பாக, இப்பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை களையும் வகையில் துப்புரவுத் தொழிலாளர் களை அதிகப்படுத்துவது போன்ற  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியு றுத்தி வந்தாலும் அதுகுறித்து பேரூ ராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகிறது. தற் சமயங்களில் பொதுமக்கள் தெரு வில் இறங்கி போராடினால் மட் டுமே ஏதேனும் ஒருசில பணிகள் பெயரளவிற்கேனும் மேற்கொள் ளப்படுகிறது என வேதனையோடு தெரிவித்தார். இவ்வாறு பேரூராட்சி, ஊராட் சிகள் என அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் முடங்கிக் கிடக் கும் பணிகளால் பொதுமக்கள் அனைவரும் பெரும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். ஆகவே, இதன் பின்னரும் காலம் கடத்தாமல் தமிழக அரசு நிர்வாகம் உடனடி யாக உள்ளாட்சி மன்றத் தேர்தலை  நடத்தி காயம்பட்ட உள்ளங்களுக்கு சிறிதளவேனும் மருந்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்ப் பார்ப்பு. -

அருண், அவிநாசி.

;