tamilnadu

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி

திருப்பூர், ஜன.25- குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் வாங்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பேரணி நடைபெற்றது. சி.ஏ.ஏ, என்.ஆர்.சி உள்ளிட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சனியன்று காலை திருப்பூர்- பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் காதர் சலீமா திருமண மண்டபம் முன்பிருந்து பேரணி தொடங்கியது. இதில் 400 பெண்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மிகப்பெரும் தேசிய கொடியை விரித்தபடி, கோரிக்கை முழக் கம் எழுப்பி அணிவகுத்துச் சென்றனர். இப்பே ரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடை பெற்ற கண்டன கூட்டத்தில் அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் சம்சல்லுகா ரஹ்மானி‌ கண்டன உரை நிகழ்த்தினார்.

;