tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை வரைவை எதிர்த்து திருப்பூரில் மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 21 – புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையம் எதிரில் வெள்ளியன்று நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட  திமுக மாணவரணி அமைப்பாளர் து.கோபிநாத் தலைமை  வகித்தார். திராவிடர் மாணவர் கழகத்தின் மாவட்ட தலைவர்  கு.திலீபன், முற்போக்கு மாணவர் கழகத்தின் வடக்கு மாவட்ட அமைப்பாளர் சி.கதிரேசன், சுயமரியாதை மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் ச.சி.தினேஷ் குமார், முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பின் மாவட்ட துணைச் செயலாளர் மு. முகமது முஃபிஸ், திருப்பூர்  மாவட்ட மதிமுக மாண வரணி பொறுப்பாளர் சிவக் குமார் உள்ளிட்டோர் உரை யாற்றினர். நிறைவாக திமுக  தலைமைக் கழகப் பேச் சாளர் செந்தில் நிறைவுரை யாற்றினார். முடிவில் திருப்பூர் மாநகர திமுக மாணவரணி அமைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.