தாராபுரம், ஜூன் 13- தாராபுரத்தில் ஜமாபந்தி துவக்க நாளில் வருவாய்த்துறை தவிர்த்து பிற துறையை சேர்ந்த அதிகாரிகள் வராததால் 31 மனுக் களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டது. தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் துணை ஆட்சியர் பவன்குமார் தலை மையில் ஜமாபந்தி நடைபெற்றது. சித்த ராவுத்தன்பாளையம், நஞ்சியம்பாளையம், ஆலாம்பாளையம், கொளத்துப்பாளையம், நல்லாம்பாளையம், வீராட்சிமங்கலம், கொளிஞ்சிவாடி, தாராபுரம் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய 9 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 199 மனுக்களை அளித்தனர். வட்டாட்சியர் ரவிச்சந்திரன், துயர்துடைப்பு வட்டாட் சியர் தட்சிணாமூர்த்தி, துணை ஆட்சியர் நேர்முக உதவியாளர் சிவகாமி மற்றும் வரு வாய் ஆய்வாளர்களும், கிராம நிர்வாக அலு வலர்கள் கலந்து கொண்டனர். நல்லாம்பாளையம் கிராமம் பழனிக் கவுண்டன்வலசை சேர்ந்த சின்னக்காளை மனைவி நல்லம்மாள் என்பவர் விபத்தின் காரணமாக நடமாடமுடியாததால் சக்கர நாற்காலி கேட்டு அவரது கணவர் மனு அளித்தார். மனுவை உடனடியாக பரி சீலனை செய்து நல்லம்மாளுக்காக அவரது கணவரிடம் சக்கர நாற்காலியை துணை ஆட்சியர் பவன்குமார் வழங்கினார். மேலும் 31 மனுக்களுக்கு ஜமாபந்தி முதல்நாளில் தீர்வு காணப்பட்டது. முன்னதாக,திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத் திற்கு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற மனு அளிக்க செல்வார்கள். இதை கருத்தில் கொண்டு அரசு உத்தரவின்பேரில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவகையில்தாலுகா அளவில் வருடத்திற்கு ஒருமுறை ஜமா பந்தி நடைபெறும். இந்த ஜமாபந்தி யின்போது வருவாய், மின்சாரம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என துணை ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் முதல்நாள் ஜமாபந்தியில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற் காததால் பொதுமக்கள் அளித்த பல்வேறு துறைசார்ந்த மனுக்களுக்கு தீர்வு காண முடியாமல் நிலுவை வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் ஜமாபந்தி நாட் களில் அனைத்துத் துறை சார்ந்த அதி காரிகளும் பங்கேற்றால் மட்டுமே பொது மக்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நட வடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.