அவிநாசி, பிப். 8- அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சியில் புதிதாக வாரச்சந்தை தொடங்கப் பட்டது. அவிநாசி வட்டம், தண்டுக்காரன்பாளையம் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வரு கின்றனர். இவர்கள் பொருட்கள் வாங்க அருகில் உள்ள வாரச்சந்தையான சேவூர் மற்றும் கானூர், புளியம்பட்டி பகுதிக்கு சென்று வந்தனர். இந் நிலையில் தற்போது தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து தண்டுக் காரன்பாளையம் பகுதியில் வாரச்சந்தை ஏற்படுத் தலாம் என முடிவு செய்தனர். அதன்படி சனியன்று சந்தை கூடிய நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் மயில்சாமி கூறியதாவது, இது முதல் வாரம் என்ப தால் பல வியாபாரிகள் கடை அமைக்க இடம் பார்த்து சென்று உள்ளனர். அடுத்த வாரம் சுமார் 125 கடை களுக்கு மேல் வரும். படிப்படியாக கடைகள் அதிக மாகும். தற்போதைக்கு சுங்கம் வசூலிக்க மாட் டோம் என தெரிவித்தார். தொடக்க நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலை வர் மயில்சாமி, அவினாசி ஒன்றிய குழுத்தலைவர் அ.ஜெகதீசன், ஊராட்சி செயலர் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.