திருப்பூர், மே10 - இந்தியப் பிரதமர் மோடி மற் றும் தமிழக முதல்வர் எடப்பாடி ஆகியோர் ஆட்சி நடத்தும் அரு கதையை இழந்துவிட்டனர் என வும், அவர்கள் ஆட்சியை விட்டு வெளியேறி மக்களிடம் மறு ஆணை பெற வேண்டும் எனவும் திருப்பூர் எம்.பி, கே.சுப்பராயன் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக திருப்பூரில் சனியன்று நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் கே.சுப்பராயன் எம்பி., கூறியதாவது, திருப்பூர் தற்போது கொதி நிலையில் இருக் கிறது. கடந்த 10 நாட்களாக திருப்பூரில் பத்து பதினைந்து இடங்களில் புலம் பெயர்த் தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடைபெற்ற சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி தொழிலாளர்களை விரட்டி யுள்ளனர் மற்றும் சிலர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இதை கடுமை யாக கண்டிக்கத்தக்கதாகும். சனியன்றும் பல இடங்களில் வீதிகளில் போய் வருவோரை எல்லாம் காவல் துறையினர் அடித்து விரட்டிக் கொண்டிருக் கின்றனர். மத்திய மற்றும் மாநில ஆட்சி யாளர்களின் பொறுப்பற்ற நட வடிக்கைகளால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்சி யாளர்கள்தான் பிரதான குற்ற வாளிகள். சிக்கலான, நெருக்கடி யான தருணத்தில் எப்படி செயல் படுகிறார்கள் என்பதை வைத்து தான் ஆட்சியாளர்களை சரியாக மதிப்பிட முடியும். ஆனால் கொ ரோனா தாக்குதல் ஏற்பட்டிருக் கும் இன்றைய சிக்கலான சூழ் நிலையில் மத்திய மோடி அரசும், மாநில எடப்பாடி அரசும் தாங்கள் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். மோடி அரசின் பொறுப்பற்ற, முன்னெச்சரிக்கை இல்லாத நடவடிக்கைகளால் தான் நாட்டில் இன்று பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து குடும் பங்களுக்கும் ரூ. 7500 வீதம் நிவா ரணம் தர வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்தின. அரசுக்கு வர வேண்டிய பெரு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரித் தொகை சுமார் ரூ.8 லட்சம் கோடியை வசூ லித்தால் இதை செயல்படுத்த முடியும். ஆனால் அதை விட்டு விட்டு பெட்ரோலுக்கு வரி போடு வது, அரசு ஊழியர் சம்பளத்தைப் பிடிப்பது என மற்றவர்கள் மீது சுமையைக் கூட்டுகின்றனர். கடந்த 29 ஆம் தேதி புலம் பெயர்த் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லலாம் என மத்திய உள்துறை அதிகாரி அறி வித்தார். ஆனால் 12 நாட்களுக்கு மேலாகியும் திருப்பூரில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு ரயில் விடவில்லை. உணவும் இல்லாமல், பணமும் இல்லாமல் இருந்தால் அவர்கள் எங்கே போவார்கள்? வீதிக்கு வராமல் என்ன செய்வார்கள்? அவர்களை தடியடித்து விரட்டு வது நியாயமில்லை. மத்திய மோடி அரசும் மாநில எடப்பாடி அரசும் ஆட்சி நடத்தும் தார்மீக நெறிமுறையை இழந்துவிட்டனர். அரசை நடத்தும் தகுதி இவர் களுக்கு இல்லை. இவர்கள் அதிகா ரத்தில் இருந்து வெளியேற வேண்டும், மக்களிடம் மறு ஆணை கோரட்டும். மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 29ஆம் தேதியே புலம் பெயர்த் தொழிலாளர்களை ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண் டும் என முதல்வருக்கு கடிதம் எழு தினேன். மார்ச் 30 ஆம் தேதி மத்திய தொழிலாளர் துறை அமைச்ச ருக்கும் கடிதம் எழுதி பட்டினிச் சாவைத் தடுக்க விவசாயத் தொழி லாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தேன். கடந்த 29 ஆம் தேதி 9 அம்சக் கோரிக்கையை அரசுக்கு அனுப்பியிருந்தேன். அதில் புலம் பெயர்ந்த தொழிலா ளர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விபரீத நிலை ஏற்பட வாய்ப் புள்ளது என்று குறிப்பிட்டிருந் தேன். மக்கள் பிரதிநிதி என்ற முறை யில் மத்திய, மாநில அரசுகளுக்குப் பல முறை கடிதம் அனுப்பியும் இது வரை ஒரு ஒப்புதல் கடிதம் கூட எனக்கு வரவில்லை. புலம் பெயர்த் தொழிலாளர் பிரச்சனை ஏற்பட்ட தற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என குற்றம் சாட்டு கிறேன், இவ்வாறு கே.சுப்பரா யன் கூறினார். இச்சந்திப்பில் இவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி உடனிருந்தார்.