tamilnadu

குடிமங்கலம் ஊராட்சிப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

திருப்பூர், ஆக. 9 - குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டி லான புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட, குடிமங்கலம், அணிக் கடவு, வாகத்தொழுவு ஆகிய கிராம ஊராட்சிப் பகு திகளில் ரூ.304.91 லட்சம் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டப்பணி களை கால்நடை பராமரிப் புத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

இதைத்தொ டர்ந்து, பெதப்பம்பட்டி குடி மங்கல ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தேசிய கால்நடை இயக்கம் திட்டத் தின் கீழ் 86 பயனாளிக ளுக்கு தலா ரூ.22 ஆயிரத்து 899 மதிப்பில் ரூ.19 லட் சத்து 69 ஆயிரத்து 314 மதிப்பீட்டிலான மின்சாரப் புல் நறுக்கும் இயந்திரங் களை விவசாயப் பெருங் குடி மக்களுக்கு வழங்கி னார். இதில் அரசு அலுவலர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;