tamilnadu

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதில் குளறுபடி முறைப்படுத்த சிஐடியு வலியுறுத்தல்

திருப்பூர், மே 19 – திருப்பூரில் இருந்து சொந்த ஊருக் குச் செல்ல விரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைப்ப தில் முறையான ஏற்பாடுகள் இல்லா மல் பல்வேறு குளறுபடிகள் இருப்ப தால், மாவட்ட நிர்வாகம் அதை முறைப் படுத்தி, விருப்பமுள்ள தொழிலா ளர்கள் அனைவரையும் அனுப்பி வைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வலியு றுத்தியுள்ளது. இது குறித்து சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் செவ்வா யன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 50 நாட்க ளுக்கு மேலாக நீடிக்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக லட்சத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலா ளர்கள் வருமானம் இல்லாமல், உணவு கிடைக்காமல் கடும் உளவி யல் நெருக்கடியைச் சந்தித்து வருகின்ற னர்.

இதில் பெரும்பான்மையானோர் சொந்த ஊர்களுக்குச் சென்று வர வேண்டும் என விரும்புகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்க ளாக புலம் பெயர்ந்த தொழிலா ளர்களை ரயில் மூலம் அவர்களின் மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி திருப்பூரில் நடைபெற்று வருகிறது. ஆனால் இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தொழிலாளர்கள் அலைக் கழிக்கப்படும் நிலை உள்ளது. குறிப்பாக முதலில் ஆன்லைன் மூலம்  பதிவு செய்து வைத்தவர்களை அனுப்பி வைப்போம் என மாவட்ட நிர்வாகம் கூறியிருந்ததால், பலர் ஆன்லைனில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர். இதற்கி டையே காவல் துறை மூலமும், கிராம  நிர்வாக அலுவலர்கள் மூலமும் தனித்த னியாக கணக்கெடுக்கப்பட்டு உள் ளது.

யாரிடம் பதிவு செய்துவைத்தால் ஊருக்குச் செல்ல முடியும் எனத் தெரி யாமல் புலம் பெயர்ந்த தொழிலாளர் கள் குழப்பமடைந்து அலைக்கழிப் பைச் சந்தித்து வருகின்றனர். இது தவிர அந்த தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பி வைக்க வாகன  ஏற்பாடு செய்வதாக ஆயிரக்கணக் கான ரூபாய் பணம் வசூலிக்கப்பட்ட தாகவும் தொழிலாளர் தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த விசயத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மனத்த விப்பைப் புரிந்து கொண்டு மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும். குளறுபடி களைக் களைந்து, அந்த தொழிலா ளர்கள் வசிக்கக்கூடிய குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாக வருவாய்த் துறையினரை அனுப்பி, சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவோர் பெயர்ப்பட்டியலை முழுமையாகத் தயாரித்து, விரைந்து அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழு கேட் டுக் கொள்கிறது. இப்பிரச்சனையில் குளறுபடிகளைக் களையாமல் தொழி லாளர் அலைக்கழிப்பு தொடருமா னால் சிஐடியு சார்பில் உரிய வடிவத்தில் இயக்கம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

;