tamilnadu

img

குடிநீர் கேட்டு முதலாம் மண்டல அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

திருப்பூர், செப்.9 - திருப்பூர் மாநகராட்சி  முதலாம் மண்டலத்திற்குட் பட்ட, வேலம்பாளையம்1 மற்றும் 5 ஆவது வார்டுக ளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சியினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் 1 மற்றும் 5 ஆவது வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் 15  நாட்களுக்கு ஒருமுறை வருவதைக் கண்டித் தும், 5 நாட்களுக்கு ஒருமுறை வழங்க வலி யுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் தலைமையில் பெண்கள் பங்கேற்புடன் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

அப்போது, புதிய குடிநீர்த் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு, நீரேற்றி சோதனை செய்யும் பணிகள் தொடங்கவுள்ளன. விரைவில் குடிநீர்ப் பிரச்சனை தீர்க்கப்ப டும் என முதலாம் மண்டல உதவி ஆணை யர் வாசுகுமார் தெரிவித்தார்.

 குடிநீர்த் தொட்டியில் நீரேற்றி சோதனை செய்து குடிநீர் வழங்கும் வரை,  குடிப்பதற்கு என்ன செய்வது? மண்டல  நிர்வாகம் தான் மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்த னர்.

 இதையடுத்து 5 நாட்களுக்கு ஒருமுறை  குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாகத் அதி காரிகள் தெரிவித்ததையொட்டி, போராட் டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட் டது. இப்போராட்டத்தில், கட்சியின் மாவட் டக் குழு உறுப்பினர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர்கள் பி.சின்னச்சாமி, ஆர்.கவிதா, மாதர் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாந்தி, வாலிபர் சங்க நகரப் பொருளாளர் ராம்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;