tamilnadu

வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடவடிக்கைக் கோரி மார்க்சிஸ்ட் மனு

திருப்பூர், செப். 27- திருப்பூர் அருகே பொங்கலூர் ஒன்றி யத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜன வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேட்டின் மீது உரிய நடவ டிக்கை எடுக்கக் கோரி  சனியன்று மாவட்ட ஆட்சியரிடம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றி யத்திற்குட்பட்ட அலகுமலை ஊராட்சி வேலாயுதம்பாளையம், கன்னடியன் கோவில், நாச்சிபாளையம் ஊராட்சி செந் தில் நகர், தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி கொடுவாய், தொங்குட்டிபாளை யம் ஊராட்சி, பருவாகரைபாளையம், குமார பாளையம், உகாயனூர் ,மாதப்பூர் கள்ளிபா ளையம் ஊராட்சி   உள்ளிட்ட பகுதிகளில் 2016 -17 மற்றும் 2018 ஆண்டுகளில்  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட் டத்தில் வீடு கட்டும் திட்டத்தில் 14 பயனா ளிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பி னும் வீடு கட்டுவதற்கான அடிப்படைக் கட்டுமான பணிகள் கூட தொடங்கப்படாத நிலையில், திட்டத்தின் முழுத் தொகையும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இத்திட்டத்தில் அதி காரிகளின் துணையோடு பெருமளவு ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது. மேலும், அழகுமலை ஊராட்சியில் சோலை மலை கவுண்டம்பாளையத்தில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கும் திட் டத்தின் கீழ் விளையாட்டு மைதானம்  அமைக்க பெரும் தொகை செலவிடப்பட் டுள்ளது. இத்தகைய ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவ டிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச்  செயலாளர் எஸ்.சிவசாமி தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயனிடம் மனு அளிக்கப்பட்டது.

;