tamilnadu

திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் பேரிடர் நிர்வாக ஆணையம் தலையிட மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர், மார்ச் 24 - கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் திருப்பூர் மாநகராட்சி நிர் வாகத்தின் செயல்பாடு ஏமாற்றம ளிப்பதாக உள்ளதால் மாநில பேரி டர் நிர்வாக ஆணையம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை மேற்கொள்ளுமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி யுள்ளது. இது தொடர்பாக மாநில வரு வாய் மற்றும் பேரிடர் நிர்வாக முதன்மை ஆணையர் டாக்டர் வி. ராதாகிருஷ்ணனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் திங்களன்று அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:  திருப்பூர் மாநகராட்சி பகுதி களில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் போதுமானதாக இல்லை. மேலும் மக்கள் கடும் குடி நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய தருணத்தில் குடிநீர் விநியோகம் பற்றாக்குறையாக இருந்து கடும் நெருக்கடியை ஏற்ப டுத்தி வருகிறது. தினமும் கைகளை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கழுவ வேண் டும் என்று அரசு ஒருபுறம் வலியு றுத்தி வரும் நிலையில், குடிப்ப தற்குக் கூட நீர் இல்லாத நிலையில் கைகளை எப்படிக் கழுவுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்குவ தற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறி வுறுத்த வேண்டும். அத்துடன் திருப்பூரில் ஆங் காங்கே குப்பைகள் ஏராளமாகத் தேங்கிக் கிடக்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் அதை அப்புறப்படுத்தக் கூடிய நடவடிக்கையையும் முழு மையாக மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக சானிடை சர் போதுமான அளவு இல்லை. அதேபோல் மாநகராட்சிக்கு உட் பட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது, குளோரின் பவுடர் போடுவது போன்ற பணிகளும் மெத்தனமான முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து இருமுறை மனு அளித்தும், ஆணையாளரை நேரில் சந்தித்துப் பேசியும் எந்த முன்னேற் றமும் இல்லை. மக்கள் அதிக எண் ணிக்கையில் கூடக் கூடாது என்ற நிலையில் மார்க்கெட் இடிப்பு முயற்சி, மக்கள் போராட்டம் நடத் திய சூழல் என மாநகராட்சி நிர்வா கத்தின் செயல்பாடு அரசின் முன் னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளச் சொல்லும் அறிவிப்புக்கு மாறாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் குறிப் பாக மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்க ளுக்கு வழங்க வேண்டிய முக கவ சங்கள், கையுறைகள், பாதுகாப்பு அம்சங்கள் போதுமான அளவு இது வரை வழங்கப்படவில்லை. இதுதவிர, மாவட்டத்தில் தொழில் துறையினருக்கு வங்கிக் கடன் நிலுவை கட்டுவது, பொது மக்கள் பெற்றுள்ள தனியார் பைனான்ஸ், மைக்ரோ பைனான்ஸ் கடன் கட்டுவதில் கொரோனா பிரச் சனை தீரும் வரை காலக்கெடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். ரேசன் கடைகள் மூலம் அத்தி யாவசியப் பொருட்களை கூடுத லாக விநியோகம் செய்ய வேண் டும்.  இந்த சூழலில் கொரோனாவை எதிர்த்த பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் தனிமைப்படுதல் ஏற்படும் வகை யில் எப்படிச் செய்வது என்ற கேள்வி எழுகிறது. ஆகவே மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையம் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு போர்க்கால அடிப்ப டையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி சார்பி லும் மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்று செ.முத்துக் கண்ணன் கூறியுள்ளார்.

;