tamilnadu

img

அவிநாசியில் போலி மணல் தயாரித்து விற்பனை - வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு

அவிநாசி, ஜூன் 19- அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் போலி மணல் தயாரித்து விற்பனை செய்து வந்த மணல் குடோனில் வெள்ளியன்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வரு கின்றனர்.  திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அருகே வேட் டுவபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அ.குரும்ப பாளையம் கிராமத்தில் அருள்முருகன் என்பவர் மணல் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்நி லையில் இவர் போத்தம்பாளையம், கருவலூர்  மற்றும் புதுச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தனி யார் மற்றும் புறம்போக்கு நிலங்களிலிருந்து கிராவல் மண்ணை எடுத்து அதை தண்ணீருடன் கலந்து, அரைத்து போலி மணல் தயாரித்து விற்பனை செய்து வந்ததாக புகார் எழுந்தது.

இதையறிந்த அப்ப குதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் வரு வாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ள னர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மணல் குடோனுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து கனிமவளத்துறைக்கு தக வல் கொடுக்கப்பட்டு தீவிர விசாரணை மேற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், போலி மணல் தயாரித்து அதை ஆற்று மணலுடன் கலந்து விற்று வந்தச் சமபவம் அப்பகுதியில் உள்ள கட்டுமா னத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;