tamilnadu

பூட்டியிருந்த பல்பொருள் அங்காடியில் கொள்ளை

அவிநாசி, ஜூன் 3- அவிநாசி அருகே பூட்டியிருந்த பல்பொருள் அங்காடி யில் திருட்டில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் செவ் வாயன்று கைது செய்தனர். அவிநாசி அருகே ராக்கியாபாளையம் சொர்ணபுரி ரிச் லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (33). இவர் அவி நாசி மங்கலம் சாலை சின்னக்கருணைபாளையம் அருகே பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது கடையை வழக்கம் போல திங்களன்று இரவு பூட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று காலை வந்து பார்த்த போது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கடை உள்ளே சென்று பார்க் கையில் மடிகணனி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட வைகளை  மர்ம  நபர்களால் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் சுரேந்திரன் அவி நாசி காவல்துறையினரிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வந்தனர்.  இதற்கிடையில் அவிநாசி மங்கலம் சாலையில் காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் படியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருநபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் பல்லடம் மாணிக்காபுரம் குடிகிணறு தோட் டம் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன்(எ) ரவிக்குமார் (39) என்றும், பல்லடம் வடுகபாளையம் ஆதிதிராவிடர் கால னியைச் சேர்ந்த மௌனேஷ்வரன்(எ) சந்தோஷ் (22) என்ப தும் தெரியவந்தது. மேலும் இவர்கள் அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள பல்பெருள் அங்காடியில் திருடியவர்கள் என்பதை உறுதிசெய்த காவலர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

;