tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் உடுமலையில் சிறப்பு முகாம்

உடுமலை, பிப். 1- மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்க உடுமலை ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடை பெற்றது. நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளி விபரங்களை சேகரிக்கவும், அரசின் திட்டங்கள் அவர்களுக்கு எளிதில் கொண்டு செல்லும் நோக்கிலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட் டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லகம் சார்பில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற் றது. இதில் பாஸ்போர்ட் அளவு வண்ண  புகைப்படத்துடன், மாற்றுத்திறனாளிக ளுக்கான தேசிய அடையாள அட்டை மற் றும் அரசு சிறப்பு மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றுடன், அடை யாளம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பங்கள் பெறப்பட் டன.  உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் (பொ) ஜெயப்பிர காஷ் முன்னிலையில் நடைபெற்ற இம்முகா மில் உடுமலையில் 954, மடத்துக்குளத்தில் 323, குடிமங்கலத்தில் 529 என மொத்தம் 1806 மனுக்கள் பெறப்பட்டன.

;